சிங்­கக்­கொ­டிக்கு பதி­லாக புலிக்­கொடி வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் வட­மா­காண சபை செயற்­ப­டு­வது கண்­டிக்­கத்­தக்கதாகும். தேசிய கொள்கை, தேசியக் கொடியை ஏற்­று­க்கொள்­ளாது இலங்­கையில் எவ்­வாறு வாழ்­வது? ஆகவே அர­சாங்கம் வடக்கு விட­யத்தில் மௌனம் காக்­கக்­கூ­டாது என மல்­வத்து  மாநா­யக்க பீடம் தெரிவித்துள்ளது.

கண்டி தல­தா­மா­ளி­கையில் நேற்று இடம்­பெற்ற பெளத்த மத நிகழ்­வொன்றில் மல்­வத்து மாநா­யக்க பீடம் மற்றும் அஸ்­கி­ரிய பீடம் உள்­ளிட்ட மாநா­யக்க தேரர்கள் கலந்­து­கொண்­டனர்.

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கை யிலேயே மல்வத்து பீடத்­தின் அனு­சா­சகர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தேசியக் கொடி வேண்டாம், தேசிய கொள்­கை­யினை ஏற்­று­க்கொள்ள முடி­யாது என்ற நிலைப்­பாட்டில் வட­மா­காண சபை செயற்­பட்டு வரு­கிறது. அதேபோல் அவர்கள் சிங்­கக்­ கொடிக்குப் பதி­லாக புலிக்­கொ­டியை கோரி நிற்­கின்­றனர்.

தற்­போ­துள்ள கொடி­யை மாற்­றி­ய­மைத்து புலியின் ஏதேனும் ஒரு அடை­யா­ளத்தை தேசியக் கொடியில் பொறிக்­கு­மாறும் அவர்கள் போராடி வரு­கின்­றனர். இது மிகவும் மோச­மான நிலை­மை­யாகும். இன்று வட­மா­கா­ண­சபை செயற்­படும் விதம் இந்த நாட்டு மக்­க­ளினால் ஏற்­று­க்கொள்ள முடியாத வகையில் அமைந்­துள்­ளது.

நாட்டின் முக்­கிய பீடங்­க­ளான நாம், இந்தச் செயற்­பா­டு­களை வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம். நாட்டின் ஐக்­கி­யத்தை அழிக்கும் வகை­யிலும், குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் வகை­யிலும் மக்கள் மத்­தியில் மீண்டும் பிரச்­சி­னை­களை தோற்­று­விக்கும் வகை­யிலும் இவர்களில் சிலர் செயற்­ப­டு­வது குறித்து எமது அதிருப்­தியை வெளிப்­ப­டுத்தி வரு­கின்றோம்.

அர­சாங்கம் இவர்­களின் விட­யத்தில் மௌனம் காப்­பது பொருத்­த­மா­ன­தல்ல. உட­ன­டி­யாக இவர்­களின் விட­யத்தில் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். இப்­போதே இவர்களின் செயற்பாடுகள் மோசமாகும் போது அதி­கா­ரங்­களை வழங்­கிய பின்னர் நிலை­மைகள் இன்னும் மோச­மா­ன­தாக அமையும்.

மாநா­யக்க தேரர்கள் இந்த அர­சாங்­கத்தின் சில செயற்­பா­டுகள் குறித்து அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். அர­சியல் அமைப்பு விடயத்திலும், வடக் கின் இன்றைய சில செயற்பாடுகள் குறித் தும் நாம் எமது அதிருப்தியை வெளிப் படுத்தியுள்ளோம். ஆகவே அரசாங்கம் இந்த விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.