Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

கோத்­தா­பய ராஜபக் ஷவை கைது செய்தால் தென்­னி­லங்­கையில் போராட்டம்.!

Posted On : November 27, 2017

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவை கைது செய்தால் தென்­னி­லங்­கையில் பாரிய மக்கள் போராட்டம் நடத்த பொது எதி­ரணி தீர்­மா­னித்­துள்­ளது. இர­க­சிய சந்­திப்­புகள், மக்கள் கூட்­டங்­களை நடத்த ஏற்­பா­டு­களும் மும்­மு­ர­மாக இடம்­பெற்று வரு­வ­தாக அர­சியல் வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தபாய ராஜபக் ஷவை கைது ­செய்ய அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக தக­வல்கள் வெளி­வந்­துள்ள நிலையில் கோத்தா ஆத­ரவு அமைப்­புகள், அர­சியல் கட்­சிகள், பொது எதி­ரணி ஆகிய இணைந்து மறை­முக சந்­திப்­பு­க­ளையும், பல்­வேறு ஏற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றன.  கோத்­தபாய ராஜபக் ஷவை கைது செய்தால் அடுத்­த­தாக தாம் எடுக்கும் நகர்­வுகள் குறி த்து ஆராய முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மையில் நேற்று முன்­தினம் இரவு கொழும்­பி­லுள்ள அவ­ரது இல்­லத்தில் பொது எதி­ர­ணி­யினர் விசேட சந்­திப்பொன்றை முன்­னெ­டுத்­தனர். இந்த சந்­திப் பின் போது சில முக்­கிய தீர்­மா­னங்­களும் நிறைவேற்றப்பட்­டுள்­ளன. குறிப்­பாக தென்­னி­லங்­கையில் மக்கள் கூட்­டங்­களை ஒன்­றி­ணைத்து பாரிய அளவில் போராட்­டங்­களை நடத்­தவும், கொழும்­பிலும் வேறு சில பகு­தி­க­ளிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிய வரு­கின்­றது.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற கூட்­டத்தில் கலந்­து­கொண்ட பொது எதி­ர­ணியின் உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­ம­கே­விடம் இது குறித்து வின­வி­ய­போது அவர் கூறி­ய­தா­வது,

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் அவ­ரது சகாக்­க­ளுக்கும் எதி­ராக ஊழல் மோச­டி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு  வரும் நிலை யில் அவை குறித்து நாம் மக்­க­ளிடம் உண்­மை­களை வெளிப்­ப­டுத்தி வரும் நிலை­யி­லேயே இன்று எமக்கு எதி­ராக இவ்­வா­றான பழி­வாங்கல் நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. எனக்கு எதி­ரா­கவும் சில குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு என்­னையும் கைது­செய்யும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அதேபோல் இந்த நாட்டை காப்­பாற்­றிய முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவையும் கைது ­செய்ய பாரிய முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அவரை கைது செய்தால் இந்த நாட்டில் தென்­னி­லங்கையில் குழப்­பங்கள் ஏற்­படும். அவ்­வா­றான நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கார­ணி­களை ஆழ­மாக கலந்­து­ரை­யா­டினோம். அவரை கைது­செய்­வது உறு­தி­யாக தெரிய வந்தால் அதற்கு எதி­ராக நாட்டின் சிங்­கள மக்கள் கிளர்ந்­தெழ வேண்டும். எனவே மக்­களை ஒன்­றி­ணைக்கும் வேலைத்­திட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்­மா­னித்­துள்ளோம். தெற் கின் பலம் என்­ன­வென்­பதை இந்த அர­சாங்கம் விளங்­கிக்­கொள்ள வேண்டும். அதற்கான சரியான வாய்ப்புக்காக நாம் காத்தி ருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் இந்த நாட்டை நேசித்த, இந்த நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நபர்களை தண்டிக்க ஒருபோதும் மக்கள் இடமளிக்கப் போவதில்லை. ஆகவே இந்த விடயங்கள் குறித்து கூட்டத்தில் ஆராய்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Comments

தொடர்புடைய செய்திகள்