Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

சுகாதார சேவை பணிப்பாளராக அணில் ஜயசிங்க நியமனம்

Posted On : November 27, 2017

புதிய சுகாதார சேவை பணிப்பாளராக வைத்தியர் அணில் ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மூலம் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்பொழுது பதில் சுகாதார சேவை பணிப்பாளராக இருக்கும் வைத்தியர் ஜயசுந்தர பண்டார 28ம் திகதி ஒய்வு பெறவுள்ள நிலையில் அந்த வெற்றிடத்திற்கே வைத்தியர் அணில் ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி வைத்தியர் அணில் ஜயசிங்க எதிர்வரும் 29ம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்