Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

ஜனாதிபதியின் தென்கொரிய விஜயம் ஆரம்பம்

Posted On : November 27, 2017

தென்கொரிய ஜனாதிபதி முன் ஜெயினின் அழைப்புக்கமைய மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று பிற்பகல் தென்கொரியா நோக்கி புறப்பட்டார்.

இலங்கை ஜனாதிபதிக்கும் தென்கொரிய ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நாளை மறுதினம் (29) இடம்பெறவுள்ளது.

இதன்போது இருதரப்பு தலைவர்களும் இடையில் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கிடையில் தற்பொழுது மிகவும் பயனுள்ள பொருளாதார முதலீட்டு தொடர்புகள் காணப்படுவதோடு, சுமார் 30,000 இலங்கையர்கள் அங்கு தொழில் புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்