நல்­லாட்சி அர­சாங்­கத்தில் ராஜபக் ஷக்­களின் குற்­றங்­களை மூடி­ம­றைக்­க­வேண்­டிய தேவை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஒரு­போ­து­மில்லை. ராஜபக் ஷக்கள் குறித்த வழக்­கு­களை முன்­னெ­டுக்­கும்­போது ஒரு­சிலர் தடுப்­ப­தாக நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். பிணை­முறி விவ­கா­ரத்தில் அக்­க­றை­ காட்டும் நபர்கள் ஏன் தாஜுதீன் விவ­கா­ரத்தில் உண்­மை­களை மூடி­ம­றைக்­கின்­றனர் எனவும் அவர் கேள்வி எழுப்­பினர்.

மாத்­தறை பகு­தியில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறி­ய­தா­வது.

இன்று நாட்டில் தற்­போது நடை­மு­றையில் செயற்­ப­டுத்­தப்­பட்­டு­வரும் சட்டம் ராஜபக் ஷ குடும்­பத்­தி­ன­ருக்கு பொருந்­தாதா? அவர்கள் விட­யத்தில் சட்டம் செயற்­ப­டாத என்ற சந்­தேகம் எனக்குள் எழு­கின்­றது. ஏனெனில் அவர்கள் தொடர்­பு­பட்ட முக்­கி­ய­மான வழக்­குகள் அனைத்தும் விசா­ர­ணைக்­காக  முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் எங்­கா­வது ஒரு இடத்தில் அவை தடைப்­ப­டு­கின்­றது. அர­சியல் கார­ணி­க­ளுக்­காக அவர்­களை பாது­காக்கும் சிலர் அவ்­வாறு செய்­வ­தனால் மக்கள் எம்­மையும், பொலிஸ் திணைக்­க­ளத்­தையும் திட்டித் தீர்க்­கின்­றனர். எவ்­வாறு இருப்­பினும் இந்த அர­சாங்­கத்தில் மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட ராஜபக் ஷ குடும்­பத்தை காப்­பாற்­றவோ, கொலை­கா­ரர்­களை, கொள்­ளைக்­கா­ரர்­களை பாது­காக்­கவோ அவர்கள் தொடர்­பி­லான குற்­றங்­களை மூடி­ம­றைக்­கவோ ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எந்­த­வித தேவையும் இல்லை.

மத்­திய வங்கி பிணைமுறி விவ­கா­ரத்தில் சட்­டமா அதிபர் திணைக்­களம் காட்­டிய அக்­க­றையில் பத்து வீதத்­தை­யேனும் ராஜபக் ஷக்களின் குற்­றங்­களை கண்­ட­றிய முன்­வ­ர­வில்லை என்­பதே உண்­மை­யாகும். அவர்­களின் குற்­றங்­க­ளையும் அவ்­வாறே விசா­ரித்­தி­ருந்தால் அவர்கள் செய்த மிகப்­பெ­ரிய ஊழல், மோச­டிகள், கொலை என்­ப­னவும் கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கவும் முடிந்­தி­ருக்கும். மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் எமது அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் யார் யாருக்கோ தொலை­பேசி அழைப்­பு­களை எடுத்­த­தா­கவும் கூறி வரு­கின்­றனர். எமது அர­சாங்­கத்தின் மீது பழி சுமத்­தவும் ,சம்­ப­வங்­களை திசை­தி­ருப்­பவும் இவ்­வா­றான கருத்­துக்­களை கூறி வரு­கின்­றனர். இந்த விவ­கா­ரத்தில் அக்­க­றை­யுடன் செயற்­படும் நபர்­க­ளுக்கு ஏன் தாஜுதீன் கொலை சம்­ப­வத்தில் அன்­றைய இரவு எத்­தனை தொலை­பேசி அழைப்­புகள் பதி­வா­கி­யுள்­ளது என்­பது குறித்தும் ,யார் யார் தொடர்­பு­பட்­டுள்­ளனர் என்­பது குறித்தும் நாட்டு மக்கள் மத்­தியில் தெரி­விக்­க­வில்லை. உண்­மை­களை சிலர் மறைத்­து­ விட்­டனர்.

யார் எதற்­காக இவ்­வாறு செய்­கின்றனர் என்று தெரி­ய­வில்லை. நல்­லாட்சி காலத் திலும் முன்­னைய குற்றவாளிகளின் ஆவி கள் நிறுவனங்களில் இருந்து இவற்றை மறைத்து வருகின்றதோ தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் மாத்திரம் இவ்வாறு தடைகள் ஏற்பட்டு வருகின்றன. இதையும் அனைவரும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.