நாட்டின் பல்­க­லைக்­கழக கட்­ட­மைப்பில் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தியில் 570 மாணவர்­க­ளுக்கு வகுப் புத் தடை விதிக்­கப்­பட்­டுள்ளது.

மேலும் 37 மாண­வர்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்ற நட­வடி­க்கைகள் எடுக்­கப்­பட்­டுள்ளதுடன் இரு­வரின் தகுதிநிலை இரத்து செய்­யப்­பட்­டுள்­ள­தாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்­சா­லைகள் அபி­வி­ருத்தி அமைச்சர் ல­க் ஷ்மன் கிரி­யெல்ல  தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான வினா நேரத்தின் போது மாத்­

தறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்பினர் புத்­திக பத்தி­ரண எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

புத்­திக பத்தி­ரண எம்.பி. கேள்வி எழுப்பும் போது,

2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தியில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களில் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­வர்கள் எத்­தனை பேர் ? நீதிமன்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்ட மாண­வர்கள் எத்­தனை பேர்? வகுப்புத் தடை விதிக்கப்­பட்ட மாண­வர்கள் எத்­தனை பேர் என்றார்.

இந்த கேள்­விக்கு அமைச்சர் பதி­ல­ளிக்கும் போது, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தியில் 570 மாண­வர்­க­ளுக்கு வகுப்புத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் 37 மாண­வர்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­துடன்  இரு­வரின் தகுதிநிலை இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் ஸ்ரீ ஜய­வர்­தனபுர பல்­க­லைக்­கழ­கத்தில் 193 பேரும், பேரா­த­னையில் 105பேரும், சப்­ர­க­மு­வவில் 83 பேரும்,மொரட்­டு­வையில் 47 பேரும், ருஹுணு 43 பேரும் கிழக்கில் 31 பேரும், தென்­கி­ழக்கில் 12 பேரும், இலங்கை பெளத்த, பாளி பல்­க­லை­க்க­ழ­கத்தில் 15 பேரும், கள­னியில் 11 பேரும், யாழில் 9 பேரும், இல ங்கை பிக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் 10 பேரும், கொழும்பில் 8 பேரும், சுதேச மருத்­து­வ கற்கை நிறுவ­கத்தில் ஒரு­வரும் , கம்­பஹா விக்­கி­ர­மா­ரச்சி ஆயுர்­வேத கற்கை நிறு­வ­கத்தில் 2 பேரு­மாக மொத்தம் 570 பேர் வகுப்பு தடைக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

அத்­துடன் இந்த காலப்­ப­கு­தியில் ரஜ­ரட்ட, ஊவா வெல்­லஸ்ஸ, சுவாமி விபு­லா­னந்தா அழ­கி­யற்­கலை நிறு­வகம், கொழும்பு பல்­க­லைக்­க­ழக கணினிக் கற்கை நிறு­வகம் ஆகி­ய­வற்றில் எந்­த­வொரு மாண­வர்­களும் வகுப்பு தடைக்கு உள்ளாகவில்லை என்றார்.