Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

மைத்திரி – மஹிந்த கூட்டணியை இணைக்கும் முக்கிய சந்திப்பு இன்று

Posted On : November 28, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திக்கட்சிக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் சுதந்திரக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக கூட்டு எதிரணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் இது குறித்த கூட்டம் இடம்பெறயிருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் அது நடைபெறவில்லை.

எவ்வாறாயினும் இன்றைய கூட்டத்தில் ஸ்ரீ சுதந்திரக்கட்சி, ஐக்கியத் தேசியக் கட்சியுடன் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்தும் செயற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என கூட்டு எதிரணி உறுப்பினர் ஒருவர் கூறினார்.

இதேவேளை உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐக்கியத் தேசியக் கட்சி என்ற நீதியில் தனித்து போட்டியிடுவதா அல்லது ஐக்கிய தேசிய முன்னணியாக போட்டியிடுவதா என்பது தொடர்பிலான கூட்டமும் இன்று பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

தொடர்புடைய செய்திகள்