Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

லயிட்க்கோஸ் பன்ன முறை மீன்பிடிக்கு உடனடி தடை

Posted On : November 28, 2017

லயிட்க்கோஸ் பன்ன முறை மீன்பிடி நடவடிக்கை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த முறை மீன்பிடியை தடை செய்யுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர மூலம் மீன்பிடி திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

லயிட்க்கோஸ் முறை மீன்பிடி காரணமாக இந்நாட்டின் மீன்வளம் தீவிரமாக அழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த தடை தொடர்பிலான வர்த்தமானி அறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு அமைச்சர் மூலம் மீன்பிடித்துறை பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடர்ந்தும் இந்த முறை மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்யுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர மூலம் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்