Home / உலகம் / தொழில்நுட்பம் /

சாம்சங் கியர் ஸ்போர்ட் மற்றும் கியர் ஃபிட் 2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்

Posted On : November 30, 2017

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கியர் ஃபிட் 2 ப்ரோ ஃபிட்னஸ் டிராக்கர் மற்றும் கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த இரண்டு சாதனங்களும் சமீபத்தில் நடைபெற்ற IFA 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. கியர் ஃபிட் 2 ப்ரோ சாதனத்தில் 1.5 இன்ச் வளைந்த சூப்பர் AMOLED ஸ்கிரீன், பில்ட்-இன் ஜிபிஎஸ் மற்றும் டைசன் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

கியர் ஸ்போர்ட் 2 சாதனத்தில் 1.2 இன்ச் வளைந்த சூப்பர் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே மற்றும் ஜிபிஎஸ், இதய துடிப்பு சென்சார் மற்றும் சாம்சங் பே அம்சத்தை இயக்க என்.எஃப்.எசி உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் அடிக்கடி மாற்றக்கூடிய 20 மில்லிமீட்டர் ஸ்டிராப்களும் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கியர் ஃபிட் 2 ப்ரோ மற்றும் கியர் ஸ்போர்ட் உள்ளிட்ட சாதனங்களும் 5 ATM தரச்சான்று பெற்றிருக்கிறது. இதனால் சாதனங்கள் 50 மீட்டர் வரை தண்ணீரிலும் அதிகப்படியான சேதம் ஏற்படாது என்றும் உறுதித் தன்மை MIL-STD-810G தரச்சான்று பெற்றுள்ளது. இவற்றுடன் ஸ்பீடோ நீச்சல் பயிற்சி வழங்கும் ஸ்பீடோ செயலி வழங்கப்படுகிறது.இந்த செயலி உங்களது நீச்சல் பயிற்சி சார்ந்த தகவல்களை வழங்கும்.

இவற்றுடன் ஆட்டோ ஆக்டிவிட்டி டிடெக்ஷன் அம்சமும் வழங்கப்பட்டுள்ளதால், பயணர் நடப்பது, சைக்கிள் ஓட்டுவது அல்லது நடனம், கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதை சரியாக உணர்ந்து கொள்ளும்.

சாம்சங் கியர் ஃபிட் 2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 1.5 இன்ச் 216×432 பிக்சல் வளைந்த சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 310 ppi
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
– 1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் பிராசஸர்
– 512 எம்பி ரேம்
– 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
– 5 ATM வாட்டர் ரெசிஸ்டண்ட், MIL STD 810G
– டைசன் ஓ.எஸ்.
– மியூசிக் பிளேயர்
– ப்ளூடூத் v4.2, வை-பை b/g/n, ஜிபிஎஸ் /GLONASS/Beidou
– 200 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கியர் ஸ்போர்ட் சிறப்பம்சங்கள்:

– 1.2 இன்ச் 360×360 பிக்சல் வளைந்த சூப்பர் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, 302ppi
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் பிராசஸர்
– 768 எம்பி ரேம்
– 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
– டைசன் ஓ.எஸ்.
– 5 ATM வாட்டர் ரெசிஸ்டண்ட், MIL STD 810G
– வைபை, 802.11 b/g/n, ப்ளூடூத் 4.2, ஜி.பி.எஸ்/GLONASS/Beidou, NFC
– 300 எம்ஏஎச் பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங்

சாம்சங் கியர் ஃபிட் 2 ப்ரோ சாதனம் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் பெரிய மற்றும் சிறய அளவுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.13,590 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கியர் ஃபிட் 2 ப்ரோ பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கியர் ஸ்போர்ட் கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைப்பதோடு இந்தியாவில் ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் பிரத்யேகமாக அமேசான் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

புதிய சாம்சங் சாதனங்கள் முன்பதிவு டிசம்பர் 4-ம் தேதி முதல் துவங்குகி, டிசம்பர் 11-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்