Home / உலகம் / தொழில்நுட்பம் /

ஒன்பிளஸ் 3, 3T ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் அன்லாக் அம்சம்: உடனே பெறுவது எப்படி?

Posted On : December 2, 2017

ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் அன்லாக் அம்சம் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் அம்சம் வழங்கப்பட்டது.

அந்த வகையில் ஒன்பிளஸ் 3 மற்றும் 3T ஸ்மார்ட்போன்களின் ஆண்ட்ராய்டு ஓரியோ சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 5.0 அப்டேட்டில் ஃபேஸ் அன்லாக் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு ஸ்மார்ட்போனின் திரையை பார்த்தே அன்லாக் செய்ய முடியும். தற்சமயம் வரை வெளியாகியுள்ள தகவல்களில் இந்த அம்சம் ஒன்பிளஸ் 5T போன்றே எவ்வித பிழையும் இன்றி சீராக வேலை செய்கிறது என கூறப்படுகிறது.

கடந்த வாரம் முதல் ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் கடந்த வாரம் முதல் வழங்கப்படுகிறது. எனினும் இந்த அம்சம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் இருக்கிறது. ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் அனைத்து ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன்களிலும் இந்த அம்சம் வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன்களில் புதிய அம்சத்தை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

– முதலில் ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்

– இனி செக்யூரிட்டி & ஃபிங்கர்பிரின்ட் அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்

– அடுத்து டிவைஸ் செக்யூரிட்டி அம்சத்தின் கீழ் ஸ்மார்ட் அன்லாக் அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.

– ஸ்மார்ட் அன்லாக் அம்சத்தின் கீழ் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்ய 5 அம்சங்கள் – டிரஸ்டெட் ஃபேஸ், டிரஸ்டெட் வாய்ஸ், டிரஸ்டெட் டிவைசஸ், டிரஸ்டெட் பிளேசஸ் மற்றும் ஆன்-பாடி டிடெக்ஷன் உள்ளிட்டவை இடம்பெறும். இதில் டிரஸ்டெட் ஃபேஸ் அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும்.

– இனி ஃபேஸ் அன்லாக் அம்சத்தை செட்டப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது அழகான பின்னணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் செட் செய்யும் வழிமுறையை பின்பற்றலாம்.

– மேற்கண்ட அம்சங்களை செய்ததும், ஃபேஸ் அன்லாக் செயல்படுத்தப்பட்டு விடும்.

ஒன்பிளஸ் ஃபேஸ் அன்லாக் அம்சம், ஆண்ட்ராய்டு டிரஸ்டெட் ஃபேஸ் அம்சத்தை சார்ந்து இயங்குகிறது. எனினும் இந்த அம்சத்தில் சில மாற்றங்களை மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓன்பிள்ஸ் 5T ஸ்மார்ட்போனின் ஃபேஸ் அன்லாக் அம்சம் ஐபோன் X ஃபேஸ் ஐடி அம்சத்தை விட மிக வேகமாக இருக்கிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்