Home / பல்சுவை / சமையல் /

சூப்பரான சைடிஷ் கத்திரிக்காய் – மொச்சை பொரியல்

Posted On : December 4, 2017

சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் – மொச்சை பொரியல் அருமையாக இருக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
பிஞ்சுக் கத்திரிக்காய்  – அரை கிலோ,
பச்சை மொச்சை – 100 கிராம்,
பூண்டு – 10 பல்,
இஞ்சி – ஒரு துண்டு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
சோம்பு (பெருஞ்சீரகம்) – அரை டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 1டிடி கிராம்,
நாட்டுத் தக்காளி – 4,
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் – சிறிதளவு,
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
இஞ்சி, பூண்டை நசுக்கிக்கொள்ளவும்.
கத்திரிக்காய், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை மொச்சையை வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் நறுக்கிய கத்திரிப்பிஞ்சு சேர்த்து, நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் வேகவைத்த மொச்சை, அரை கப் நீர் விட்டுக் கிளறவும்.
எல்லாம் நன்கு சேர்ந்து உதிர்உதிராக ஆன பின் இறக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி நசுக்கிய பூண்டு, இஞ்சி, உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு புரட்டி கத்திரிக்காய் – மொச்சை கலவையில் சேர்த்துக் கலக்கவும்…
கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

Comments

தொடர்புடைய செய்திகள்