Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கைது

Posted On : December 5, 2017

சட்ட விரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 08 பேர் வடமத்திய கடற்படை பிரிவு அதிகாரிகளால் தலைமன்னார் கடற் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் கைது செய்யப்பட வேளையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திய 3 டிங்கி இயந்திரங்கள், 2 வலைகள், 330 கிலோ கிராம் மீன்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட மீன்கள் தலைமன்னார் உதவி மீன்பிடி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் சந்தேக நபர்கள், டிங்கி இயந்திரம் மற்றும் ஏனைய உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்