Home / உலகம் / தொழில்நுட்பம் /

இந்தியாவில் டி.வி.எஸ். அபாச்சி RR 310 அறிமுகம்

Posted On : December 6, 2017

டி.வி.எஸ். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அபாச்சி RR 310 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்த அபாச்சி RR 310 முன்னதாக 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியவில் என்ட்ரி-லெவல் ஸ்போர்ட்பைக் பிரிவில் வெளியிடப்பட்டுள்ள டி.வி.எஸ். அபாச்சி RR 310 பல்வேறு பயன்பாடுகளை வழங்கும் படி வடிவமைக்கப்பட்டுளஅளது. புதிய RR 310 மாடல் பி.எம்.டபுள்யூ. G 310 R  மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள டி.வி.எஸ். அபாச்சி RR 310 டி.வி.எஸ். நிறுவனத்தின் ஓசுர் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்படுகிறது.

புதிய டி.வி.எஸ். அபாச்சி RR 310 முன்பதிவு டிசம்பர் மாதம் துவங்கி, அடுத்த ஆண்டு துவக்கத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. அபாச்சி RR 310 மாடலில் 4-ஸ்டிரோக், 4-வால்வ், சிங்கிள் சிலிண்டர், ரிவர்ஸ்-இன்க்லைன்டு 312சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 33.5 பி.எச்.பி பவர், 9700 ஆர்.பி.எம்., 27.3 என்.எம். பீக் டார்கியூ, 7700 ஆர்.பி.எம். செயல்திறன் கொண்டுள்ளது.

சிறப்பாக கட்டுப்படுத்தி, எளிமையாக இயக்க ஏதுவாக ஸ்ப்லிட் சேசிஸ் கொண்ட ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேம், உயர் ஏரோடைனமிக் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. முன்பக்கம் அப்சைடு-டவுன் கியாபா ஃபோர்க், பின்புறம் கியாபா மோனோஷாக் அம்சமும் முன்பக்கம் 300 மில்லிமீட்டர் பெட்டல் டிஸ்க், பைபர் ரேடியல் கேலிப்பர் மற்றும் பின்புறம் 240 மில்லிமீட்டர் பின்புற டிஸ்க், டூயல் சேனல் ABS வசதிகள் நிறைந்த பிரேக்கிங் செய்யப்பட்டுள்ளது.

அபாச்சி RR 310 மாடலில் செங்குத்தாக நிறுத்தப்பட்ட முழுமையான டிஜிட்டல் மற்றும் பல்வேறு அம்சங்களை வழங்கும் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லைட், எல்இடி டர்ன் சிக்னல்கள் வழங்கப்பட்டுள்ளது. வடிவமைப்புகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதால், ஃபுல் ஃபேரிங் தலைசிறந்த ஏரோடைனமிக் அம்சங்கள் நிறைந்துள்ளது.

சிறப்பான ஏரோடைனமிக் கொண்டிருப்பதால் அபாச்சி RR 310 அதிவேகமாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனைகளில் புதிய அபாச்சி RR 310 மணிக்கு 163 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அபாச்சி RR 310 விலை ரூ.2.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோடு சிவப்பு மற்றும் மேட் பிளாக் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்