Home / விளையாட்டு /

இலங்கை சிறை அதிகாரிகள் மற்றும் கேரள கைதிகள் இடையே கிரிக்கெட் போட்டி

Posted On : December 6, 2017

இலங்கை மற்றும் இந்தியா இடையே கிரிக்கெட் என்பது பொதுவான ஒன்று. கிரிக்கெட் என்று வருகிறது போது அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவர்.

இந்நிலையில், இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் இலங்கை மற்றும் இந்தியா இடையே கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த விருப்பம் தெரிவித்தனர். அதுவும் இலங்கை சிறை அதிகாரிகளுக்கும், கேரளா கைதிகளுக்கும் இடையே போட்டி நடத்த வேண்டும் என கூறினர். அவர்களின் விருப்பம் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது.

இலங்கை விடுத்த கோரிக்கையை அடுத்து கிரிக்கெட் போட்டி நடத்த கேரளா சிறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். கேரளா சிறையில் கைதிகள் பல புதிய பணிகளை செய்து வருகின்றனர். பியூட்டி பார்லர், சப்பாத்தி செய்வது மற்றும் பல வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதனை இலங்கை சிறையைச் சேர்ந்த பல அதிகாரிகள் பார்வையிட அடுத்த மாதம் கேரளா வருகின்றனர். அவர்கள் வரும் போது கிரிக்கெட் போட்டி நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதற்காக நன்னடத்தை மற்றும் விருப்பம் அடிப்படையில் கைதிகள் கிரிக்கெட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். போட்டி சரியாக நடந்தால் மேலும் இது போன்ற போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்படும் என தெரிவித்தனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்