Home / உலகம் / தொழில்நுட்பம் /

டாடா மோட்டார்ஸ் மாடல்களுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி

Posted On : December 6, 2017

ஆண்டு இறுதியை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மாடல்களை வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்குவதாக அறிவித்துள்ளது.

2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நவம்பர் மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸ் 35 சதிவிகதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. அந்த வகையில் ஆண்டு இறுதி சலுகையாக தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு ரூ.26,000 முதல் ரூ.1 லட்சம் முதல் தள்ளுபடி வழங்குகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு நிதி நிறுவனங்களுடன் இணைந்து 100 சதவிகித நிதியுதவிகளை வழங்குகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ரூ.1 மட்டும் முன்பணமாக செலுத்தி டாடா வாகனங்களை பெற முடியும். தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள சலுகை மற்றும் தள்ளுபடிகள் டாடா ஹெக்சா, டியாகோ, டிகோர், செஸ்ட் மற்றும் ஸ்டார்ம் உள்ளிட்ட மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.

டாடா டியாகோ மாடலின் தள்ளுபடி ரூ.26,000, டிகோர் மாடலுக்கு ரூ.32,000, செஸ்ட் ரூ.68,000, ஹெக்சா ரூ.78,000 மற்றும் ஸ்டார்ம் மாடலுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தியாவில் பண்டிகை காலத்தில் துவங்கிய விற்பனைக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவன விளம்பரம் மற்றும் வியாபார பிரிவு தலைவர் தெரிவித்தார்.

இந்திய சந்தையில் புதிய மாடல்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார். சமீபத்தில் அறிமுகமான டாடா நெக்சன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இதே மாடலின் எலெக்ட்ரிக் பதிப்பை டாடா மோட்டார்ஸ் ப்ரிட்டனில் சோதனை செய்து வருகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்