Home / உலகம் / தொழில்நுட்பம் /

மஹேந்திரா XUV500 பெட்ரோல் மாடல் இந்தியாவில் அறிமுகமானது

Posted On : December 6, 2017

மஹேந்திரா நிறுவனத்தின் XUV500 பெட்ரோல் மாடல் இந்தியவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹேந்திரா XUV500 பெட்ரோல் விலை ரூ.15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது.

புதிய மஹேந்திரா XUV500  “G AT” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த எஸ்.யு.வி. 2.2 லிட்டர் எம்ஹாக் (mHawk) பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 138 பி.எச்.பி மற்றும் 320 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட எம்ஹாக் இன்ஜின் மேனுவல் மோட் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

தற்சமயம் XUV500 டீசல் மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்த வரை 7.0 இன்ச்  டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், படில் லேம்ப், லோகோ ப்ரோஜெக்ஷன் வழங்கப்பட்டிருப்பதோடு ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படவில்லை.

இத்துடன் ஆட்டோமேடிக் டெம்பரேச்சர் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ரெயின் சென்சிங் வைப்பர்கள், லைட் சென்சிங் ஹெட்லேம்ப், பேசிவ் கீலெஸெ என்ட்ரி, 8-வழிகளில் மாற்றக்கூடிய ஓட்டுநர் சீட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் டூயல் ஏர்-பேக், ரோல்ஓவர் மிடிகேஷன் கொண்ட ESP, EBD சார்ந்த ABS உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்