Home / விளையாட்டு /

இலங்கை தொடரில் 610 ரன்கள் குவித்த கோலி தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேற்றம்

Posted On : December 7, 2017

இலங்கை தொடரில் இரண்டு இரட்டை சதங்களுடன் 610 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது பெற்ற விராட் கோலி தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

இந்தியா – இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. 1-0 எனத் தொடரை கைப்பற்றியது. மூன்று டெஸ்டில் 5 இன்னிங்சில் விராட் கோலி பேட்டிங் செய்தார். இதில் இரண்டு இரட்டை சதங்கள், ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் 610 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்த விராட் கோலி 3 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது விராட் கோலி 893 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 938 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.
ஜோ ரூட் 879 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் இருந்த புஜாரா 873 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். 4-வது இடத்தில் இருந்த கேன் வில்லியம்ஸ் 865 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர் 815 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா 795 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், பாகிஸ்தானின் அசார் அலி 755 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், டீன் எல்கர் 732 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.
இலங்கை கேப்டன் சண்டிமல் 743 புள்ளிகளுடன் 8 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் டெல்லி டெஸ்டில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்