Home / சினிமா / இந்திய சினிமா /

தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு

Posted On : December 7, 2017

வருகிற ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு இந்த கூட்டத்திற்கு தடை கேட்டு தயாரிப்பாளர்கள் தொடர்ந்த வழக்குக்கு ஐஜோர்ட் தடை விதிக்க மறுத்துவிட்டது.

நடிகர் சங்கத்தின் தலைவராகவும், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் நடிகர் விஷால் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு தடை கேட்டு தயாரிப்பாளர்கள் சிலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், தயாரிப்பாளர் சங்க தேர்தல் வாக்குரிமை தொடர்பாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், அதாவது 3 திரைப்படங்கள் தயாரித்து இருந்தால் மட்டுமே வாக்கு உரிமை என்ற சட்டத்திருத்தத்தை கொண்டு வரப்போவதாகவும், இதனால் பல தயாரிப்பாளர்களின் வாக்குரிமை பாதிக்கப்படும் என்றும் கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். ஆனால், பொதுக்குழுவின் முடிவுகள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 13-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Comments

தொடர்புடைய செய்திகள்