Home / உலகம் /

ரஷ்யா அதிபர் தேர்தலில் மீண்டும் புதின் போட்டி

Posted On : December 7, 2017

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் தான் போட்டியிடப் போவதாக புதின் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவிலுள்ள நிஸினி சோஃப்கோராடில் கார் தொழிற்சாலையில் தொழிலாளர் மத்தியில் பேசும்போது, “2018-ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர்  தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்வேன்” என்று புதின் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது 65 வயதாகியுள்ள விளாடிமிர் புதின் 2000- ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் அதிபராக இருந்து வருகிறார்.

ரஷ்ய அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் ஏற்கெனவே 3 முறை அதிபராக பதவி வகித்துள்ளார். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து பரிசீலனை செய்வேன் என்று புதின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த வருடம் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக புதின் அறிவித்திருக்கிறார்.

அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 80 சதவீத மக்கள் புதினுக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்