Home / உலகம் / தொழில்நுட்பம் /

ரேன்ஜ் ரோவர் வெலர் இந்தியாவில் வெளியானது

Posted On : December 7, 2017

ரேன்ஜ் ரோவர் நிறுவனத்தின் வெலர் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.73.83 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ரேன்ஜ் ரோவர் முன்பதிவுகள் துவங்கியுள்ள நிலையில் விநியோகம் ஜனவரி 2018-ம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேன்ஜ் ரோவர் நிறுவனத்தின் நான்காவது மாடலான வெலர் ரேன்ஜ் ரோவர் இவோக் மற்றும் ஸ்போர்ட் மாடல்களுக்கிடையே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. புதிய ரேன்ஜ் ரோவர் வெலர் மூன்று பவர்டிரெயின் அம்சங்கள்: 2.0 லிட்டர் டீசல், 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் வேரியண்ட்களில் கிடைக்கிறது.

வெலர் மாடலில் கூப் போன்ற ரூஃப்லைன், வைடு ஸ்டான்ஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் ரேன்ஜ் ரோவர் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரேன்ஜ் ரோவர் வெலர் மாடலில் 177 பி.எச்.பி. பவர் வழங்கும் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் யூனிட், 3.0 லிட்டர் வி6 இன்ஜின் 296 பி.எச்.பி. பவர் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் மாடல் 247 பி.எச்.பி. பவர் வழங்குகிறது.

புதிய ரேன்ஜ் ரோவர் எஸ்.யு.வி. மாடலின் இன்டீரியர் அம்சங்களில் இரண்டு டச் ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கும் மற்றொரு திரையை கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களை இயக்க வழி செய்கின்றன.

இன்டீரியரில் மைக்ரோஃபைபர் மற்றும் லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய எஸ்.யு.வி. ஆடி கியூ7, மெர்சிடிஸ் பென்ஸ் GLE, வால்வோ XC90 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்