Home / உலகம் / தொழில்நுட்பம் /

சீன ராணுவத்தினை கண்காணிக்க புதிய ட்ரோனை தயார் செய்தது இந்தியா

Posted On : December 8, 2017

இந்திய எல்லையின் சீன ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க நொய்டாவில் உள்ள நியூ ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் புதிய ட்ரோன் ஒன்றை தயார் செய்துள்ளது

நொய்டாவில் அமைந்துள்ள நியூ ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் ட்ரோன் எனப்படும் சிறிய ரக விமானம் ஒன்றை தயார் செய்துள்ளது. இந்திய எல்லையில் சீன ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க ட்ரோன் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. 65 ஆயிரம் அடி உயரம் பறக்கக் கூடிய இந்த விமானம் அருணாச்சல பிரதேசம் மாநிலம் தவாங் நகரில் பறக்கவிடப்பட உள்ளது.

அதன் மூலம் திபெத்தின் சிங்கெட்ஸ் நகரில் சீன ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும். நாள் முழுவதும் 200 கி.மீ. தூரத்தில் உள்ளவற்றையும் பார்க்க முடியும். செயற்கை கோளின் மூலம் தெளிவான படங்களை எடுக்க அதன் எரிபொருள் அளவினை அதிகரிக்க வேண்டும். ஆனால், ட்ரோனை பயன்படுத்துவன் மூலம் செயற்கை கோளின் பயன்பாட்டை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.

நியூ ஸ்பேஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் இந்திய தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் விமானமாகும். இந்த விமானம் 2019 ஆண்டில் உபயோகத்திற்கு வரும் என கருதப்படுகிறது. விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் இரவிலும் மிக தெளிவான படத்தை கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்