Home / உலகம் / தொழில்நுட்பம் /

முதல் விற்பனையில் விற்று தீர்ந்த ரெட்மி 5A

Posted On : December 8, 2017

சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி 5A ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையில் முழுமையாக விற்று தீர்ந்துள்ளது.

சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி 5A ஸ்மார்ட்போனின் முதல் ஃபிளாஷ் விற்பனை நேற்று நடைபெற்றது. பிளிப்கார்ட் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் விற்பனையில் எத்தனை சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், ரெட்மி 5A ஸ்மார்ட்போனின் அடுத்த ஃபிளாஷ் விற்பனை டிசம்பர் 14-ம் தேதி நடைபெற இருக்கிறது. புதிய ரெட்மி 5A ஸ்மார்ட்போனினை ஆன்லைன் மட்டுமின்றி ஆஃப்லைன் தளங்களிலும் விற்பனை செய்ய இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.

ரெட்மி 5A சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச் எச்டி 1280×720 பிக்சல் டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 குவாட்கோர் சிப்செட்
– 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
– 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
– 3000 எம்ஏஎச் பேட்டரி
– 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், ஜிபிஎஸ்
– ஆண்ட்ராய்டு நௌக்கட் சார்ந்த MIUI 9

மெட்டாலிக் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள ரெட்மி 5A ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் 2 ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.5,999 மற்றும் 3 ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்