Home / உலகம் / தொழில்நுட்பம் /

16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட ஒப்போ F5 யூத் இந்தியாவில் வெளியானது

Posted On : December 8, 2017
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் ஒப்போ F5 யூத் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட ஒப்போ F5 யூத் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா வெளியிட்டார்.

முந்தைய ஒப்போ F5 போன்று இல்லமால் புதிய F5 யூத் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இத்துடன் சில சிறப்பம்சங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அழகிய செல்ஃபி எடுக்க ஏதுவாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஒப்போ F5 யூத் இந்தியாவில் பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒப்போ F5 யூத் சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச், FHD+1080×2160 பிக்சல் டிஸ்ப்ளே
– மீடியாடெக் ஹீலியோ P23 பிராசஸர்
– 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2 அப்ரேச்சர்
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
– ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் சார்ந்த கலர் ஓ.எஸ். 3.2
– டூயல் சிம், 4ஜி, வைபை, ப்ளூடூத்
– 3200 எம்ஏஎச் பேட்டரி

புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் முக அங்கீகார வசதி வழங்கப்ட்டுள்லது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முகத்தில் உள்ள 200 புள்ளிகளை கண்டறிந்து ஸ்மார்ட்போன்களை அன்லாக் செய்யும். இதே போன்று அழகிய செல்ஃபி புகைப்படங்களை எடுக்கவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

இந்தியாவில் ஒப்போ F5 யூத் ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் டிசம்பர் 8-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கும் ஒப்போ F5 யூத் விவோ வி7 ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்