Home / உலகம் / தொழில்நுட்பம் /

அதிக வரவேற்பு இருந்தும் திரும்பப் பெறப்படும் மாருதி சுசுகி டிசையர்

Posted On : December 9, 2017

இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் டிசையர் மாடல்களை மாருதி சுசுகி திரும்ப பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி சமீபத்தில் அறிமுகம் செய்த டிசையர் செடான் மாடல்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. பின்புற வீல் ஹப் கோளாறு காரணமாக திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 23, 2017 முதல் ஜூலை 10, 2017 வரை விற்பனை செய்யப்பட்ட சுமார் 21,494 மாருதி டிசையர் மாடல்களை திரும்ப பெறுகிறது. டிசையர் மாடல்கள் திரும்ப பெறுவது குறித்து மாருதி சுசுகி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட டிசையர் மாடல்களை பயன்படுத்துவோருக்கு அக்டோபர் 3-ம் தேதி முதல் தகவல் அனுப்பப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட டிசையர் மாடல்களை அதன் பயனர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள மாருதி சுசுகி சர்வீஸ் மையங்களில் வாகனத்தை இலவசமாக சரி செய்து கொள்ள முடியும்.

இத்துடன் தங்களது கார் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கார் குறியீட்டு எண் கொண்டு மாருதி சுசுகி வலைத்தளத்திலும் சரி செய்து கொள்ள முடியும். இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் டிசையர் ஏற்கனவே ஒரு லட்சம் விற்பனையை வெளியான ஐந்து மாதங்களில் கடந்துள்ளது.

புதிய டிசையர் வெளிப்புற மற்றும் இன்டீரியர் வடிவமைப்பு புதிய தலைமுறை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. தற்சமயம் புதிய டிசையர் வாங்குவோர் தங்களது வாகனத்தை பெற மூன்று மாதங்களுக்கு காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

புதிய சுசுகி டிசையர் 1.2 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின், 1.3-லிட்டர் DDiS டீசல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் மோட்டார் 82 bhp மற்றும் 113 Nm செயல்திறனும், டீசல் மோட்டார் 74 பி.எச்.பி. பவர் 190 என்.எம். டார்கியூ கொண்டுள்ளது.

இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியை விரும்பும் வாட்க்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்