Home / விளையாட்டு /

என்னுடைய பந்து வீச்சில் 10 கி.மீ. வேகத்தை அதிகரித்துள்ளேன்: சித்தார்த் கவுல்

Posted On : December 9, 2017

என்னுடைய பந்து வீச்சில் 10 கி.மீட்டர் வேகத்தை அதிகரித்துள்ளேன் என்று இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இடம் பிடித்துள்ள சித்தார்த் கவுல் கூறியுள்ளார்.

விராட் கோலி தலைமையிலான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தவர் சித்தார்த் கவுல். 2008-ம் ஆண்டு இளையோர் அணி உலகக்கோப்பையை வெல்லும்போது சித்தார்த்தும் இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார்.

பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் சித்தார்த் கவுலுக்கு சுமார் 9 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் சீனியர் அணியில் இடம்கிடைத்துள்ளது. இலங்கை அணிக்கெதிராக நாளை முதல் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணியில் சித்தார்த் கவுல் இடம்பிடித்துள்ளார்.

தன்னுடைய வேகப்பந்தில் இன்னும் 10 கி.மீட்டர் வேகத்தை அதிகரித்துள்ளேன் என்று சித்தார்த் கவுல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்தார் கவுல் கூறுகையில் ‘‘நான் வழக்கமாக ஆட்டத்தின் மத்திய நேரம் மற்றும் கடைசி நேரத்தில் 120 கி.மீ்ட்டர் வேகத்தில்தான் பந்து வீசுவேன். ஆனால், தற்போது 10 கி.மீட்டர் அதிகரித்து 130 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறமையை பெற்றுள்ளேன்.

என்னுடைய பந்து வீச்சில் வேகத்தை அதிகரித்ததற்கு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கும், இந்திய ‘ஏ’ அணியும் உதவிகரமாக இருந்தது. அவர்கள் என்னுடைய பந்து வீச்சு முறையை ஆராய்ந்து, அதற்கு ஏற்றவாறு பயிற்சி அளித்தனர்’’ என்றார்.

Comments

தொடர்புடைய செய்திகள்