Home / விளையாட்டு /

திறமையில் ரொனால்டோவால் மெஸ்ஸியை நெருங்க முடியுமா? – குரேஷிய வீரர் ராகிடிக் கருத்து

Posted On : December 11, 2017

போர்ச்சுகல் வீரரும், ரியால் மேட்ரிட் அணியின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 5-வது முறையாக வென்றிருக்கலாம் ஆனால் லியோனல் மெஸ்ஸியை அவர் நெருங்க முடியாது என்று குரேஷிய நடுக்கள வீரரும் பார்சிலோனா அணிக்கு ஆடுபவருமான இவான் ராகிடிக் தெரிவித்துள்ளார்.

கால்பந்தில் தான் ஒரு கிரேட்டஸ்ட் ப்ளேயர் என்று ரொனால்டோ பிரான்ஸ் புட்பால் ஊடகத்திடம் தெரிவித்ததையடுத்து லியோனல் மெஸ்ஸியை அடித்துக் கொள்ள ஆளில்லை என்று ராகிடிக் கூறியுள்ளார்.

“என்னுடைய கருத்து என்னவெனில், கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கான அனைத்து மரியாதைகளுடன் கூறுகிறேன், ரொனால்டோ சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றிருக்கலாம் அதற்காக வாழ்த்துகிறேன், ஆனால் என்னைப் பொறுத்தவரையில் லியோனல் மெஸ்ஸி தனிச்சிறப்பு வாய்ந்த கால்பந்து வீரர், தன்னிகரற்றவர்.

ஒரேயொரு நம்பர் 1 தான் இருக்க முடியும் அது மெஸ்ஸிதான். அவருக்குப் பின்னால் உள்ளவர்களெல்லாம் அவருடன் இணைய விரும்புவது துரதிர்ஷ்டமே.

வில்லா ரியல் அணிக்காக மெஸ்ஸி அந்த அணியின் 2-வது கோலை அடித்த போது ஐரோப்பிய கால்பந்து லீகுகளிலேயே ஒரு கிளப்புக்காக அதிக கோல்களை அடித்த ஜெர்ட் முல்லரின் சாதனையை சமன் செய்தார் மெஸ்ஸி.

Comments

தொடர்புடைய செய்திகள்