Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

பாமக ஆட்சியில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு: மகளிர் மேடை நிகழ்ச்சியில் ராமதாஸ் உறுதி

Posted On : December 11, 2017

பெண்கள் வாக்களித்து பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சியில் அமரவைத்தால் அவர்களுக்கு சட்டமன்றத்திலும், அமைச்சரவையிலும் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் தெரிவித்தார்.

மதுராந்தகம் அருகே மேல்மருவத்தூரில் பெண்களை அரசியலுக்கு வரவேற்கும் மகளிர் மேடை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் பேசியது:

பாமகவை ஆட்சியில் அமர வைத்தால் சட்டமன்றத்திலும், அமைச்சரவையிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தேர்தலே அல்ல. அது பணம் கொடுத்து ஏமாற்றும் தேர்தல். பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதைத் தடுக்காமல் இருந்தால் அது தேர்தலே அல்ல. பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் வேட்பாளரின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பாமக மாநில துணைப் பொதுச் செயலர் பொன்.கங்காதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்