Home / உலகம் / தொழில்நுட்பம் /

விரைவில் வெளியாகும் யமஹா YZF R15 V3

Posted On : December 13, 2017

யமஹா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை YZF R15 V3 ஏற்கனவே பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல் இந்தியாவில் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இந்திய விற்பனை மையத்தில் காணப்பட்டுள்ளது.

யமஹா விற்பனை மையத்தில் காணப்பட்டதை விரைவில் இந்த மாடல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய யமஹா பைக் ஜனவரி 2018-இல் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட யமஹா YZF R15 V3 மிக விரைவில் வெளியிடப்படலாம் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்வதாய் அமைந்துள்ளது.

இதன் ஃபேரிங் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு, இதன் ஃபியூயல் டேன்க் 11 லிட்டர்களாக மாற்றப்பட்டுள்ளது. முந்தைய R15 v2.0 மாடலில் 12 லிட்டர் ஃபியூயல் டேன்க் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்துடன் முந்தைய மாடலில் அனலாக் டேகோமீட்டர் வழங்கப்பட்ட நிலையில், புதிய மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் R1/R6 போன்று காட்சியளிக்கிறது.

இத்துடன் புதிய யமஹா R15 v3.0 மாடலின் பின்புற சீட் முந்தைய மாடல்களை விட உயரம் குறைவாக இருக்கிறது. சர்வதேச மாடலில் அப்சைடு-டவுன் ஃபோர்க் வழங்கப்பட்ட நிலையில், யமஹா R15 v3.0 மாடலில் முன்பக்க ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியா மாடலில் IRC டையர்களை கொண்டிருந்த நிலையில் இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட மாடல்களில் MRF டையர்கள் வழங்கப்பட்டது.

Comments

தொடர்புடைய செய்திகள்