Home / உலகம் / தொழில்நுட்பம் /

விரைவில் இந்தியா வரும் ஹானர் 9 லைட்: முழு தகவல்கள்

Posted On : December 15, 2017

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஹூவாய் என்ஜாய் 7S ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதை தொடர்ந்து ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனினை டிசம்பர் 21-ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் TENAA சான்றளிக்கும் தளத்தில் LLD-AL10 என்ற குறியீட்டு பெயரில் இதே ஸ்மார்ட்போனின் தகவல்கள் கசிந்திருந்தது.

கிரின் 659 சிப்செட், கிளாஸ் பாடி, 13 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி பிளாஷ், 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமராவும், 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதே போன்ற கேமரா அமைப்பு ஹானர் 9i ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 9 லைட் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 5.65 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் எச்டி+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் கிரின் 659 பிராசஸர்
– மாலி T830-MP2 GPU
– 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் EMUI
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 13 எம்பி பிரைமரி கேமரா எல்இடி பிளாஷ், 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 13 எம்பி செேல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி பிளாஷ், 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா
– கைரேகை ஸ்கேனர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்ஏஎச் பேட்டரி

புதிய ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் பிளாக், வைட், நீலம் மற்றும் கிரே நிறங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இதன் முழுமையான அதிகாரப்பூர்வ விவரங்கள் அடுத்த வாரம் தெரியவரும்.

Comments

தொடர்புடைய செய்திகள்