Home / விளையாட்டு /

இந்தியா தொடர்ச்சியாக வென்ற 8 தொடர்கள்

Posted On : December 18, 2017

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்மூலம் தொடர்ச்சியாக 8-வது தொடரை வென்று முத்திரை பதித்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. அதில் இருந்து இந்திய அணி தொடரை இழக்காமல் தொடர்ச்சியாக 8-வது தொடரை வென்று சாதனை புரிந்தது. இதில் நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக தலா 2 முறை வென்று இருந்தது. இந்த 8 தொடரில் 3 தொடர் வெளிநாட்டில் (ஜிம்பாப்வே, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை) கைப்பற்றியது. மீதியுள்ள 5 தொடரை சொந்த மண்ணில் வென்றது.

இந்திய அணி இதற்கு முன்பு 6 ஒருநாள் தொடரை வென்றதே (நவம்பர் 2007- ஜூன் 2009) சிறப்பான நிலையாகும். வெஸ்ட்இண்டீஸ் அணி தொடர்ச்சியாக 14 தொடரை (1980-1988) வென்ற இருக்கிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்