Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

ஹோண்டுராஸ் அதிபர் தேர்தல் சர்ச்சை: ஆர்லேண்டோ வெற்றி என தேர்தல் தீர்ப்பாயம் அறிவிப்பு

Posted On : December 18, 2017

ஹோண்டுராஸ் அதிபர் தேர்தல் முடிவுகளில் குழப்பம் நிலவிய நிலையில் தற்போதைய அதிபர் ஆர்லேண்டோ வெற்றி பெற்றதாக அந்நாட்டு தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

வட அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் அதிபராக இருப்பவர் ஆர்லேண்டோ ஹெர்னாண்டஸ். கடந்த மாதம் 26-ம் தேதி அந்நாட்டு அதிபர் தேர்தலில் எதிர்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே 1.53 சதவிகித வாக்கு வித்தியாசம் நிலவியது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் அதிபர் வெற்றி பெற்றதாக அறிவிக்கவில்லை. இருப்பினும், ஆர்லேண்டோ அதிபராக பொறுப்பேற்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி வேட்பாளர் சால்வேதார் நசெரல்லா தேர்தல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போதைய அதிபர் ஆர்லேண்டோ ஹெர்னாண்டஸ் வெற்றி பெற்றுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சிகள் மக்களை போராட வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்