Home / சினிமா / இந்திய சினிமா /

2 மாநில தேர்தல் முடிவுகள்: நிஜமாகவே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? – பிரதமர் மோடிக்கு, பிரகாஷ் ராஜ் கேள்வி

Posted On : December 18, 2017

2 மாநில தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடிக்கும் நிலையில், இந்த வெற்றியால் நிஜமாகவே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்று பிரதமர் மோடிக்கு, நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகளில் பாரதிய ஜனதா 107 தொகுதிகளில் முன்னிலை பெற்று 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சியை பிடிக்கிறது. அதே போல் இமாச்சலப் பிரதேசத்தில் 68 தொகுதிகளில் 43 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது.
இரு மாநில வெற்றியை பாரதிய ஜனதா தொண்டரகள் கொண்டாடி வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் அவர் கேட்டுள்ளதாவது,
அன்புள்ள பிரதமரே, வெற்றி பெற்றதற்கு முதலில் வாழ்த்துக்கள். ஆனால் இந்த வெற்றி குறித்து உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்ற தலைப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், மரியாதைக்குரிய பிரதமர் அவர்களுக்கு
அன்பிற்குரியவரே, வாழ்த்துக்கள்.. ஆனால் குஜராத்தில் 150 தொகுதிகளில் வெற்றி பெறுவதாக தாங்கள் கூறியது என்ன ஆனது? நிலைமை இன்னதென்பதை இப்போதாவது அறிந்தீர்களா? இந்த வெற்றி குறித்து உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?
அ) பிரித்தாளும் அரசியல் என்றுமே வேலைக்கு ஆகாது.
ஆ) பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் மிகப்பெரிய பிரச்சனைகள் இருக்கின்றன. மதவாதம், சாதி, துணை குழுக்கள் மிரட்டல், தனிப்பட்ட விரோதத்தை தீர்த்துக் கொள்ளும் மனப்பான்மை…
இ) கிராமப்புறங்களில் பல முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன
இந்திய கிராமங்களில் விவசாயிகள், ஏழைகளின் குரல் மேலும் ஓங்கியிருக்கிறது. அதை எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா?
இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Comments

தொடர்புடைய செய்திகள்