Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

இலங்கை – மலேஷிய பிரதமர்கள் சந்திப்பு

Posted On : December 19, 2017

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேஷிய பிரதமர் நஜீப் அப்துல் ரஸாக் மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று அலறி மாளிகையில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் இடம் மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக, விசேட அலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம, அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, சட்டம்,ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாறப்பன, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஜே.எம்.முஸம்மில், அரச தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் சுதர்ஷன குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்