Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

பிணை முறி மோசடி விவகாரம்- தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை பாதிக்கும்

Posted On : December 19, 2017

மத்திய வங்கி பிணை முறி மோசடியானது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை பாதிக்கும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி வாய்ப்பினை மிக மோசமாக பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன முன்னணி கட்சியும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பாரிய தோல்வியைத் தழுவும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சிக்கு மாத்திரமே தேர்தலில் வெற்றிபெறக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்