Home / உலகம் /

ஆப்கன்: போலீஸ் தலைமையகத்தில் தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் – 8 போலீசார் பலி

Posted On : December 22, 2017

ஆப்கானிஸ்தானின் காந்தகரில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் காந்தகரில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் காந்தகார் மாகாணம் மைவாந்த் மாவட்டத்தில் உள்ள போலீஸ் தலைமையகத்தின் வாயிலில் இன்று காலை 5 மணியளவில் வெடிகுண்டுகளை நிரப்பிய காருடன் வந்த தீவிரவாதிகள், வாசலை குறிவைத்து மோதி குண்டுகளை வெடிக்க வைத்தனர்.
பயங்கர சப்தத்துடன் வெடித்த இந்த குண்டு வெடிப்பில் 8 போலீசார் பலியானதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்