Home / ஆன்மீகம் /

கள்ளழகர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வருகிற 29-ந்தேதி நடக்கிறது

Posted On : December 22, 2017
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றானது மார்கழி மாதம் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு விழாவும் ஒன்றாகும். இந்த விழாவானது கடந்த 19-ந் தேதி தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 29-ந் தேதி(வெள்ளிக்கிழமை) அதிகாலையில் 5 மணிக்கு மேல் 5½ மணிக்குள் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.

மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பல்லக்கில் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வருவார். பின்னர் அங்குள்ள சயன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இந்த கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலிலும் 29-ந் தேதி அதே நேரத்தில் சொர்க்கவாசல் வழியாக வந்து பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்