Home / ஆன்மீகம் /

சுவாமி ஐயப்பன் தங்க அங்கி ஊர்வலம் சபரிமலை புறப்பட்டது

Posted On : December 22, 2017

26-ந்தேதி மண்டல பூஜையின்போது அணிவிக்கப்படும் சுவாமி ஐயப்பன் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டது.

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் வருகிற 26-ந்தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் நடை கடந்த மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டது. கோவில் நடை திறக்கப்பட்ட நாள் முதல் திரளான பக்தர்கள் இருமுடி கட்டி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா, சபரிமலை ஐயப்பனுக்கு 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை காணிக்கையாக வழங்கி உள்ளார். அந்த தங்க அங்கிஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜையின் போது, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு விசே‌ஷ பூஜைகள் நடைபெறும்.

இந்த தங்க அங்கியானது, பத்தனம்திட்டை மாவட்டம் ஆரன்முளாவில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். இந்த ஆண்டு மண்டல பூஜையையொட்டி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.

இதையொட்டி தங்க அங்கிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் தங்க அங்கியை வைத்ததும் ஊர்வலம் தொடங்கியது.

இன்று இரவு ஓமலூரி லும், நாளை (23-ந்தேதி)இரவு கோணியிலும், 24-ந் தேதி இரவு பெரிநாட்டிலும் ஊர்வலம் நிறைவடைகிறது. பின்னர் அங்கிருந்து சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும் தங்க அங்கியானது, 25-ந்தேதி மதியம் பம்பை கணபதி கோவிலை சென்றடையும். அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு எடுத்து செல்கிறார்கள்.

25-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்தில் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும்.

18-ம் படி வழியாக கொண்டு செல்லப்படும் தங்க அங்கி சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

மீண்டும் 26-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 9 மணி வரை மட்டுமே நெய் அபிஷேகம் நடைபெறும்.

அதைத்தொடர்ந்து பகல் 11 மணிக்கு களபாபிஷேகம் நடைபெறுகிது. பகல் 11.40 மணி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் பிரசித்திபெற்ற மண்டல பூஜைகள் நடைபெறும். மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகளுக்கு பின் இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

மண்டல பூஜை நெருங்கு வதால் சபரிமலையில் பக்தர் கள் கூட்டம் அலைமோது கிறது. இதனால் மரக்கூட்டம் வரை பக்தர்கள் வரிசை காணப்படுகிறது. 12 மணி நேரம் காத்திருந்த பிறகுதான் அவர்களால் சுவாமி ஐயப் பனை தரிசனம் செய்ய முடிகிறது.

இதுவரை சபரிமலை கோவில் வருமானமாக ரூ.146 கோடியே 4 லட்சம் கிடைத்துள்ளது. 12 லட்சம் டின் அரவணை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்