Home / சினிமா / இந்திய சினிமா /

நடிகை பாவனா – நவீன் திருமண தேதி அறிவிப்பு

Posted On : December 22, 2017

நடிகை பாவனாவுக்கும், அவரது காதலரான நவீனுக்கும் திருச்சூரில் வைத்து திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்கான திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பாவனா.
கேரளாவைச் சேர்ந்த இவர், மலையாளம் மற்றும் பல கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்தது.
இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
நடிகை பாவனா – நவீன் திருமணம் விரைவில் நடப்பதாக கூறப்பட்டது. அதன் பிறகு திருமணம் தள்ளிப்போனது. இப்போது வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதி திருமணம் நடக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் திருமணம் நடைபெறுகிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்