Home / சினிமா / இந்திய சினிமா /

நாளை மதுரவீரனின் விருந்து!

Posted On : December 22, 2017

`மதுர வீரன்’ படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் நிலையில், `மதுர வீரன்’ படக்குழு நாளை இசை விருந்தளிக்க முடிவு செய்துள்ளது.

வருகிற பொங்கல் பண்டிகைக்கு சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் `ஸ்கெட்ச்’ பிரபுதேவாவின் `குலேபகாவலி’, `மதுர வீரன்’ ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், `மதுர வீரன்’ படத்தில் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பி.ஜி.முத்தையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். சமுத்திரகனி, ‘வேல’ ராமமூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வி.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த படத்தில் இருந்து, `என்னடா நடக்குது நாட்டுல’ என்ற சிங்கிள் ஒன்று வெளியாகி வைரலாகி வரும் நிலையில், படத்தின் பாடல்கள் நாளை வெளியாக இருப்பதாக சந்தோஷ் தயாநிதி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்