Home / சினிமா / இந்திய சினிமா /

‘பலூன்’ படத்தை கைப்பற்றிய முன்னிண நிறுவனம்

Posted On : December 22, 2017

சினிஷ் இயக்கத்தில் ஜெய் – அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பலூன்’ படத்தை முன்னணி நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது.

புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் ஜெய் – அஞ்சலி – ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பலூன்’.

காதல் கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான டிரைலருக்கும் வரவேற்பை பெற்றுள்ளது.
’70 எம் எம்’ நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ நிறுவனம் சார்பில் திலீப் சுப்பராயன் இணைந்து தயாரித்து இருக்கும் ‘பலூன்’ படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் திரையரங்கு உரிமையை ஆரா சினிமாஸ் கைப்பற்றியிருந்த நிலையில், படத்தின் தொலைக்காட்சின் உரிமையை ஜி தமிழ் அதிக தொகைக்கு வாங்கியிருக்கிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்