Home / உலகம் / தொழில்நுட்பம் /

நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என தகவல்

Posted On : December 23, 2017

ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் FCC தளத்தில் காணப்பட்டதை தொடர்ந்து, தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதன்படி நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் டூயல் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அதன்படி புதிய ஸ்மார்ட்போனின் 128 ஜிபி மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் 5.5 இன்ச் OLED ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் OLED ரக டிஸ்ப்ளே கொண்ட முதல் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இருக்கும். இத்துடன் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 12 எம்பி + 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

3250 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, சாம்சங்கின் 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ரெசல்யூஷன் மற்றும் ஆஸ்பெக்ட் ரேஷியோ சார்ந்து எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.

எனினும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குவாட் எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இதில் 18:9 ரக ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இத்துடன் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும் என்றும் இது ஸ்மார்ட்போனின் பின்புறம் வழங்கப்படுமா அல்லது முன்பக்கம் வழங்கப்படுமா என்பது கேள்விகுறியாக உள்ளது.

தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்கள் நோக்கியா சார்பில் உறுதி செய்யப்படாத நிலையில், நோக்கியா 9 ஸ்மார்ட்போன் சார்ந்த அதிகாரப்பூர்வ தகவல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்