ஃபேஸ்புக் அக்கவுண்ட் துவங்க ஆதார் கட்டாயம்?
ஃபேஸ்புக்கில் புதிதாக கணக்கு துவங்குவோர் தங்களின் உண்மையான பெயரை பயன்படுத்துவதை உறுதி செய்ய ஆதாரில் உள்ள பெயரை பதிவு செய்யக் கோரும் அம்சத்தினை சோதனை செய்து வருகிறது.
இந்தியாவில் ஃபேஸ்புக் கணக்கு துவங்குவோர் தங்களது உண்மையான பெயரை பயன்படுத்துவதை உறுதி செய்ய தங்களது ஆதாரில் உள்ள பெயரையே பதிவு செய்ய கோரும் அம்சத்தை சோதனை செய்து வருகிறது.
புதிய அம்சத்தின் மூலம் ஃபேஸ்புக்கில் புதிதாக துவங்கப்படும் போலி கணக்குகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். இந்தியாவில் மட்டும் சுமார் 24.1 கோடி ஃபேஸ்புக் கணக்குகள் பயன்படுத்திப்பட்டு வருகிறது. உலகளவில் ஃபேஸ்புக் பயனாளிகள் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
ஃபேஸ்புக் மொபைல் தளத்தில் புதிய கணக்கு துவங்குவோருக்கு ஆதாரில் உள்ள பெயர் (‘name as per Aadhaar’) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. ஆதாரில் உங்களது பெயர் என்ன? ஆதாரில் உள்ள பெயரை பயன்படுத்தும் போது நண்பர்களால் உங்களை மிக எளிமையாக கண்டறிய முடியும். ரெடிட் மற்றும் ட்விட்டர் பயனர்களால் முதலில் கண்டறியப்பட்டது.
எனினும் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படவில்லை, ஃபேஸ்புக் மொபைல் தளத்தில் மட்டும் சில வாடிக்கையாளர்களுக்கு இந்த அம்சம் காணப்பட்டது.
‘மக்கள் தாங்கள் நன்கு அறியப்படும் பெயர்களை ஃபேஸ்புக்கில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். புதிதாக ஃபேஸ்புக்கில் பதிவு செய்யும் போது கூடுதல் மொழிகளை வழங்கும் சோதனையில், மக்கள் தங்களது ஆதார் பெயரை பயன்படுத்துவதன் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அறியப்பட உதவியாக இருக்கும்’ என ஃபேஸ்புக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளும் வசதியுடன் இந்த அம்சம் சோதனை செய்யப்படுகிறது, எனினும் மக்கள் தங்களது ஆதார் கார்டில் உள்ள பெயரை பதிவு செய்ய வேண்டிய அவசியம் கட்டாயமாக்கப்படவில்லை. ஃபேஸ்புக் சேவையை மொபைலில் பயன்படுத்தி வரும் சிறிய எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்படுகிறது.
ஃபேஸ்புக் அதிகாரி வழங்கியுள்ள தகவல்களின் படி ஆதாரில் உள்ள பெயரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இதுவரை கட்டாயமாக்கப்படவில்லை என்றாலும், ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தங்களது உண்மையான பெயரை பயன்படுத்த வேண்டும் என்பதில் ஃபேஸ்புக் கவனமாக உள்ளது.