Home / விளையாட்டு /

ஆஷஸ் 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 327 ரன் குவித்தது

Posted On : December 27, 2017

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது.

முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 244 ரன் எடுத்து இருந்தது. வார்னர் சதம் அடித்தார் அவர் 103 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

கேப்டன் சுமித் 65 ரன்னும், ஷானே மார்ஷ் 65 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது.

தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 327 ரன் குவித்து ‘ஆல்அவுட்’ ஆனது. சுமித் 76 ரன்னும், ஷான் மார்ஷ் 61 ரன்னும் எடுத்தனர்.

ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும், ஆண்டர்சன் 3 விக்கெட்டும், வோக்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்துக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. மார்க் ஸ்டோன்மேன் 15 ரன்னில் லயன் பந்தில் வெளியேறினார்.

Comments

தொடர்புடைய செய்திகள்