Home / ஆன்மீகம் /

திருத்தணி முருகன் கோவிலில் 31-ந்தேதி திருப்படி

Posted On : December 27, 2017

ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருப்புகழ் திருப்படி திருவிழா வருகிற 31-ந்தேதி நடக்கிறது.

ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் திருப்புகழ் திருப்படி திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு திருப்புகழ் திருப்படி திருவிழா வருகிற 31-ந்தேதி நடக்கிறது.

அன்று காலை 8 மணிக்கு சரவண பொய்கை முதல் மலைப்படியில் குத்து விளக்கு ஏற்றி பூஜைகள் செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து கோவில் நிர் வாகம் சார்பில் 365 படி களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

காலை 11 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகப்பெருமான் திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். விழாவில் 100-க்கும் மேற்பட்ட பஜனை குழுவினர் முருகனின் பக்தி பாடல்களை பாடி வழிபடுகின்றனர்.

31-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்புகழ் திருப்படி திருவிழாவை முன்னிட்டு 31-ந்தேதி அதிகாலை முதலே பக்தர்கள் திரள்வார்கள்.

மறுநாள் ஆங்கில புத்தாண்டு என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்