Home / உலகம் / தொழில்நுட்பம் /

புதிய நிறத்தில் பட்டையை கிளப்பும் 2018 பஜாஜ் டாமினர்

Posted On : December 27, 2017

இந்திய மோட்டார்சைக்கிள் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ 2018 பஜாஜ் டாமினர் மாடலை புதிய நிறத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்திய மோட்டார்சைக்கிள் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ 2018-ம் ஆண்டில் சில மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. எனினும் இதற்கு முன் பஜாஜ் டாமினர் 2018 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

திரஸ்ட்சோன் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் டாமினர் 400 சில காஸ்மெடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பஜாஜ் டாமினர் 400 மாடல் இந்தியாவில் டிசம்பர் 2016-ம் ஆண்டில் அறிமுகம் செய்தது. பின் ஒரு ஆண்டிற்கு பின் டாமினரின் புதிய மாடலை அறிமுகம் செய்ய பஜாஜ் முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் காஸ்மெடிக் மாற்றங்களுடன் 2018 டாமினர் மாடலின் மூலம் விற்பனையை அதிகரிக்க முயற்சித்து வருகிறது. 2018
டாமினர் 400 மாடல் அந்நிறுவனத்தின் சக்கன் ஆலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் பாடி பேனல்களில் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்படவில்லை என்றாலும் சிவப்பு நிற சிங்கிள்-டோன் பெயின்ட் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

2018 டாமினர் 400 மாடலின் ஹேன்டிள்பேர், பெரிமீட்டர் ஃபிரேம், ஃபூட்பெக் அசெம்ப்ளி மற்றும் ஸ்ப்லிட் கிராப் ரெயில்களில் சில்வர் ஷேட் செய்யப்பட்டுள்ளது. புதிய சில்வர் அக்சென்ட் முந்தைய மோட்டார்சைக்கிளுடன் ஒப்பிடும் போது புதிய மோட்டார்சைக்கிளிற்கு புதிய தோற்றம் வழங்குகிறது. இதைதவிர மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய 2018 பஜாஜ் டாமினர் 400 மாடலில் 373 சிசி ஃபியூயல் இன்ஜெக்டெட், லிக்விட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 34.5 பி.எச்.பி. பவர், 35 என்.எம். பீக் டார்கியூ, 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்