Home / உலகம் / தொழில்நுட்பம் /

மொபைல் போன், லேப்டாப் வேகம் குறைகிறதா? காரணம் இதுதான்!

Posted On : December 27, 2017

க்ரிப்டோகரன்சி: இணையத்தில் பயன்படுத்தப்படும் கள்ளப்பணத்தை ஈட்டும் வழிமுறையை மைனிங் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் பிரவுசர் சார்ந்த மைனிங் சில வாரங்களாக வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது.

சைபர்செக்யூரிட்டி நிறுவனமான சிமான்டிக் வெளியிட்டுள்ள தகவல்களின்படி பிரவுசர் சார்ந்த மைனிங் கடந்த மாதங்களில் 34 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரவுசர் மைனிங் மேற்கொள்ள ஏதுவான குறியீடுகள் அதிகளவு மொபைல் போன் செயலிகளில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொனெரோ மற்றும் பிட்காயின் போன்ற க்ரிப்டோகரென்சிக்களை மிகவும் கடினமான கணித கேள்விகளுக்கு பதில் கண்டறிந்து கம்ப்யூட்டர் கோட் வடிவில் இவை உருவாக்கப்படுகின்றன. மைனிங் என அழைக்கப்படும் இந்த வழிமுறையை பின்பற்ற அதிகளவு கம்ப்யூட்டிங் திறன் தேவைப்படும்.

பிரவுசர் மைனிங்:

இவ்வாறு மைனிங் செய்யும் குறியீடுகளை வலைத்தளத்தில் இணைத்து, குறிப்பிட்ட வலைத்தளத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் லேப்டாப் மற்றும் மொபைல் சாதனங்களை சைபர் திருடர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த வழிமுறை முழுவதும் குறியீடு மூலம் மேற்கொள்ளப்படுவதால் மைனிங் சத்தமில்லாமலும், மிக வேகமாகவும் செய்ய முடியும்.

அதிக பயனர்களை கொண்டுள்ள இந்திய வலைத்தளங்கள் இவ்வாறான நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும் என பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் இந்திரஜித் புயான் தெரிவித்துள்ளார். 2013-ம் ஆண்டு முதல் பிரவுசர் சார்ந்த மைனிங் செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்தாலும், 2017-ம் ஆண்டின் கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளது.

காயின்ஹைவ் சேவை:

க்ரிப்டோகரன்சி மதிப்பு பலமடங்கு அதிகரித்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக அமைதியாக நடந்து வந்த பிரவுசர் மைனிங் காயின்ஹைவ் போன்ற சேவைகளால் ஊக்கம் பெற்றுள்ளதாக சிமான்டெக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயின்ஹைவ் வழங்கும் சேவையானது, வலைத்தளங்களை வைத்திருப்போருக்கு வலைத்தள பயனர்களின் வன்பொருளில் இருந்து தேவைப்படும் திறனை பயன்படுத்திக் கொள்ள குறியீடுகளை வழங்குகிறது. உதாரணத்திற்கு, 1000 பேர் பயன்படுத்தும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வலைத்தளத்தின் நிறுவனர் 1000 பேரின் கணினிகளை மைனிங் செய்ய பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். என புயான் தெரிவித்துள்ளார்.

காயின்ஹைவ் சோதனை: 

இதே வழிமுறையை பயன்படுத்தி க்ரிப்டோகரென்சிக்களை ஈட்ட முடியுமா என்பதை மும்பையை சேர்ந்த தொழில்நுட்ப வலைத்தள நிறுவனர் சோதனை செய்துள்ளார். அந்த வகையில் குறிப்பிட்ட குறியீடுகளை தனது வலைத்தளத்தில் இயக்கி ஒரு வாரத்தில் ரூ.1,300 மதிப்புடைய மொனெரோக்களை ஈட்டியதாக அவர் தெரிவித்தார்.

வலைத்தளத்தில் இந்த குறியீடுகளை இயக்கி மைனிங் செய்வது மிகவும் எளிமையானதாக இருந்தது. வலைத்தளத்தில் பல லட்சம் பேர் வந்து செல்லும் போது, இந்த வழக்கம் மிகவும் லாபமானது என அவர் தெரிவித்தார். இவரது வலைத்தளத்தில் தினமும் ஆறு லட்சம் பேர் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்திருந்தார்.

பிரவுசர்-மைனிங் ஆபத்து:

இணையவாசிகளுக்கு தெரியாமல் சத்தமில்லாமல் நடைபெறும் பிரவுசர்-மைனிங் குறிப்பிட்ட சாதனத்தின் வெபத்தை அதிகரித்து அதன் வேகத்தை குறைக்கும். சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த குறியீடுகள் வலைத்தளம் திறந்திருக்கும் போது மட்டுமே இயங்கி வந்தன.

ஆனால் புதிய வித குறியீடுகள் தொடர்ந்து கண்டறியப்படுவதால், வலைத்தளங்கள் இயக்கவில்லை என்றாலும் இந்த குறியீடுகள் இயங்குகின்றன. இதனால் கணினியின் வன்பொருள் மைனிங் செய்ய பயன்படுத்தப்படும் என புயான் தெரிவித்துள்ளார். இவை வலைத்தளங்களை ஹேக் செய்து, குறியீடுகளின் மூலம் பணத்தை சம்பாதித்து வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்