Home / பல்சுவை / சமையல் /

சத்திய அரிய – பயம் பருப்பு கஞ்சி

Posted On : December 28, 2017

இந்த கஞ்சி வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு தெம்பை தரும். எளிதில் ஜீரணமாகும். இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அரிசி – 1/2 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் – தேவைக்கு
சீரகம் – தேவைக்கு
பூண்டு – 10  பல்

செய்முறை :
பூண்டை தோல் உரித்து வைக்கவும்.
அரிசி, பயத்தம் பருப்பை நன்றாக கழுவி வைக்கவும்.
கழுவிய அரிசியை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
குக்கரில் கொரகொரப்பாக பொடித்த அரிசி, பயத்தம் பருப்பு, தண்ணீர், சீரகம், பூண்டு சேர்த்து 7 விசில் போட்டு வேக வைத்து இறக்கவும்.
குக்கர் விசில் போனவுடன் மூடியை திறந்து கடைசியில் உப்பு, [பாட்டி மசாலா] மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து அருந்தவும்.
அருமையான அரிசி – பயத்தம் பருப்பு கஞ்சி ரெடி.

Comments

தொடர்புடைய செய்திகள்