Home / பல்சுவை / மருத்துவம் /

சப்பாத்திக்கு அருமையான பட்டர்பீன்ஸ் பொரியல்

Posted On : December 28, 2017

தோசை, சப்பாத்தி, சாதம், நாண், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பட்டர்பீன்ஸ் பொரியல். இன்று இந்த பொரியல் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பட்டர் பீன்ஸ் – கால் கிலோ,
வெங்காயம் – ஒன்று,
முந்திரி – 5,
கசகசா, சோம்பு – தலா ஒரு டீஸ்பூன்,
பட்டை, லவங்கம் – தலா ஒன்று,
தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பட்டர் பீன்ஸை கழுவி குக்கரில் போட்டு, தேவையான  தண்ணீர் ஊற்றி உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் தூவி மூடி இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
தேங்காய் துருவலுடன் முந்திரி, கசகசா, சோம்பு, லவங்கம், பட்டை, தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த தேங்காய் மசாலா, [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, வேக வைத்த பட்டர் பீன்ஸை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
இது… சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சை டிஷ்.

Comments

தொடர்புடைய செய்திகள்