Home / உலகம் /

டிரம்பின் பாதை தவறானது – ஈரான் ஆன்மீகத் தலைவர்

Posted On : December 28, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்பின் நடவடிக்கைகள் ஈரான் – அமெரிக்க தொடர்புகளை நாளுக்கு நாள் சிக்கலுக்குள்ளாக்குவதாக அமைந்துள்ளதாகவும், டிரம்ப் ஈரானை எதிரியாகப் பார்ப்பதாகவும் ஈரான் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார்.

ஹொலிவுட் உலகில் பிரகாசித்த நடிகரும் பின்னர் ஜனாதிபதிப் பதவியையும் ஏற்றுக் கொண்ட ரொனல்ட் ரேகன்  கூட ஈரானுடன் நல்ல தொடர்புகளை வைத்திருந்தார். ரேகனும் டிரம்பைப் போன்று ஈரானுக்கு எதிரானவர். இருப்பினும், அவர் காரண காரியங்களுடனேயே ஈரானுக்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இவர் ஈரானுக்கு எச்சரிக்கையையும்  விடுத்திருந்தார்.

ரேகன் இன்று இல்லை. அவர் ஈரானுக்கு செய்த குற்றங்களுக்கான தண்டனையை கடவுள் வழங்குவான். இன்று ஈரான் அன்றை விடவும்  பலமாகவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தற்பொழுது கட்டற்ற முறையில் ஈரான் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார். இதனால், டிரம்பின் பாதை தவறானது என்பது விளங்குகின்றது எனவும் ஆன்மீகத் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்