Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

பள்ளிப் படிப்பை முடிக்காத 9 குஜராத் அமைச்சர்கள்

Posted On : December 28, 2017

குஜராத் அமைச்சர்களில் 9 பேர் பள்ளிப் படிப்பை முடிக்காதவர்கள் என்று தெரியவந்துள்ளது.

குஜராத் சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக தொடர்ந்து 6-வது முறையாக முதல்வர் விஜய் ருபானி தலைமையில் 20 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நேற்று முன்தினம் பதவியேற்றது.

புதிய அமைச்சர்களில் 9 பேர் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை. இவர்கள் 5-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்புகளுக்கு இடையே படித்தவர்கள். 9 பேர் பட்டதாரிகள். ஒரு அமைச்சர் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் டிப்ளமா படித்தவர். 3 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 20 பேர் கொண்ட அமைச்சரவையில் அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.34 கோடி. 18 பேர் கோடீஸ்வரர்கள்.

போட்டட் தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர் சுரப் யஷ்வந்த்பாய் தலால் படேல் என்பவர்தான் மிகவும் பணக்கார அமைச்சர். இவரது சொத்து மதிப்பு ரூ.123.78 கோடி. தேவ்கத்பரியா தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சருக்குத்தான் மிகவும் குறைவான சொத்து உள்ளது. இவரது சொத்து மதிப்பு ரூ.35.45 லட்சம். அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் அமைச்சர் இடம் பெற்றுள்ளார். இந்த தகவல்களை தேர்தலை கண்காணிக்கும் அமைப்பான ஜனநாயக சீர்திருத்தத்துக்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்